விதையாய் ஒரு நாள்

Labels:

விதையாய் ஒரு நாள்

விதைக்கப்பட்டேன்,

செடியாகி கொடியாகி

நிழல்தரும் மரமாகி

மலர் சொரியுமென்ற

நம்பிக்கையில்..

விதி செய்த சதியால்

பாசியாய் படர்ந்தேன்

வேசியாய் வாழ்வதிலும்

பாசியாய் வாழ்வது மேலென

அடங்கினேன் ஒடுங்கினேன்..

மீண்டும் மரம் படைக்கும்

எண்ணத்தில்

விதைத்தேன் ஒரு விதை..

சுதையில்லா சமூகத்திலொரு

சதை வாழ்க்கை..

என்று முடியுமோ

இந்த தொடர் வேட்கை..

கயிறுக்காக உயிரிழந்தாள் பத்தினி

Labels: , , ,

கயிறுக்காக

உயிரிழந்தாள் பத்தினி..

மயிருக்காக

மானமிழந்தான் நடிகன்..

கற்பனைக்காக்

கருவியிழந்தான் கவிஞன்..

விற்பனைக்காக

லாபமிழந்தான் வணிகன்..

பகுத்திருந்தும்

அறிவையிழந்தான் முன்கோபி..
படித்திருந்தும்

பாடம் மறந்தான் வேலையில்லா பட்டதாரி..

எல்லாமிருந்தும்

எல்லாம் மறந்தார் தெய்வ ஞானி..

உணர்வுக்கு

கரு கொடுத்தார் பொதுநலமி..

அக்கருவுக்கு

உரு கொடுத்தார் சுயநலமி..

மடமையை கொளுத்துவோம்

Labels: , , ,

ஆண்மைக்கும்

பெண்மைக்கும்

சான்றிதழாய்

சிறு சிசு.

ஆழத்தில்

ஆண்மைக்கே

வெற்றியாய் ஒரு

ஆரவாரம்..

பெண்மையின்

விசும்பல்

அனாதரவாய்.

மடமையை கொளுத்துவோம்

நூறு ரூபாய் காந்தி

Labels: , ,

சிந்தனையாய்
சிரிக்கிறேன்..
சில்லறைக்கு
சிரிப்பதாய்..
நடத்துனர்.

கவிதையின் பிரசவம்

Labels: , ,

நினைவுகளை

உயிரிலேற்றி

கனவுகளை

கருவாய்

தறித்து

பிரசவித்தேன்

ஒரு கவிதை..

விமர்சனமாய்

மீண்டும் அமைதி.

கவிஞனின் சாபம்

Labels: , ,

(தன்) கவிதையை
கவிஞன்
விமர்சித்தால்
நெறி கெட்டவனாவான்..
நேசித்தால்
தறி கெட்டுபோவான்..
வாசித்தால்
வரை திரிந்தவனாவான்..
சுவாசித்தால்
சுகம் மிகுந்து சாவான்..
கவிஞனின் சாபம்.

ஈழம்

Labels:

மயிரு..
போனாலென்ன..
ஊற்று
கொஞ்சம்
தயிரை
உறிஞ்சிக்
குடிக்கிறேன்..

கருவறைக்குள் கற்பிழந்த சமூகம்

Labels: , ,

நான்

உந்துதலின்

ஊனம்..

அதனால்

விதி

விலங்கு..

சந்திப்பதும்

சாய்வதுமாக

வாழ்க்கை..

நிந்திப்பது

பொழுதுபோக்கு..

கருவறைக்குள்

கற்பிழந்தது என்

சமூகம்.

கனவிலிருந்து ஒரு கவிதை

Labels: ,

கனவிலிருந்து ஒரு கவிதை

நினைவிற்கு கொண்டுவர

உயிரெழுத்துக்களை காணவில்லை

தேடச்சென்றோர் திரும்பவில்லை..

ஒரு நடுநிசிப் பயணம்

Labels: , ,

கனவுக்கும் நினைவுக்கும்

இடையே ஒரு நடுநிசிப் பயணம்

உயிர் மட்டுமே உனதாய்

எங்கும் அமைதி..

உணர்வு குறைந்த

ஒரு வெட்டவெளி..

மிதக்கும் அறிவு..

கரையில்லா

கவிதையாய் காவேரி..

அதில்

ஓடிப் பார்க்கவொரு

ஓடம்.

இரவை உண்ணும்

தாகத்தோடு

உன்னை மட்டுமே

அறியும் கால ஏடு.

தட்டிப்பார்க்க

ஒரு கதவு

திறக்க நீயிருந்தாய்

உள்ளேயும்

வெளியேயும்..

திறந்தாலும் நீயில்லை

மீண்டும்

பிறந்தாலும் நீயில்லை

சுற்றிலும் போர்க்கோலம்

திலகமிட்டது நீ

கண்ணீருக்கு உள்ளே

சுடும் நெருப்பு

தீயாய் கனலாய்..

சவரம் செய்யாத

கண்களுடன்

கனவாய் நீ

மறைய

நினைவாய் நான்

எழுந்தேன்.

பிணத்திற்காக ஒரு கழுகு

Labels: , , ,

தினந்தோறும்
கணந்தோறும்
இனந்தோறும்
பிணந்தோறும்
இனத்திற்காக ஒரு ஈ
பிணத்திற்காக ஒரு கழுகு.

விளக்கொளியில் வீதியாய் நிற்கிறேன்..

Labels: , , ,

பகுத்தறிவின்

பாதியாய்

பெயர்கிறேன்..

உள்கனிந்தோர்

சாதியாய்

பணிகிறேன்..

நல்லோர்க்கு

நாதியாய்

உணர்கிறேன்..

நிலவொளியின்

நீதியாய்

களிக்கிறேன்..

இன்னும்..

விளக்கொளியில்

வீதியாய்

நிற்கிறேன்..

தி.க.வுக்கு ஒரு வார்த்தை..

Labels: , ,

தி.க.வுக்கு ஒரு வார்த்தை..
நேற்று படித்தது..
சூரிய கிரகண மூடத்தனத்தை
ஒழிக்க உணவுப் பந்தி..
அய்யா..
இது என்ன ஒரு மூட போராட்டம்
மூடநம்பிக்கையில்
மூடத்தை ஒழிக்க
உங்கள் பொன்நேரத்தை
செலவிடுதலை விடுத்து
நம்பிக்கையை விதைக்க
ஒரு முயற்சி செய்யலாமே..
எனக்கு தி.க தெரியாது,
தி.மு.க தெரியாது,
அ.தி.மு.க தெரியாது
வேறு எந்த ‘க’வும் தெரியாது..
உண்மையல்லாதவையறிய
என் மனம் விரும்புவதில்லை..
அறியும் ஆவலில்
பாமரனாய் கேட்கிறேன்...
சொல்லுங்கள்..
எது உங்கள் கொள்கை
கடவுளில்லை என்பதா..
நாமே கடவுளென்பதா..
சம்பிரதாய
சடங்குகளில்லையென்பதா..
என் வரலாறு
உதிக்குமுன்பே
உங்கள்
கட்சியும் கொள்கையும்
மூப்பை நெருங்கியதாய்
கேள்வியுருகிறேன்..
நீங்கள் கண்ட
பல காட்சிகள்
என் கருவறை
சுவரைக் கூட
தொட்டதில்லை..
இருந்தும் கேட்கிறேன்..
என்னால் நன்றாக
பார்க்க முடிகிறதென்கிறேன்..
நீங்கள் இல்லையென்கிறீர்கள்..
குருடாக இருக்கும் வரை
உங்களுக்கு
எப்படித்தெரியும்
என்னால்
பார்க்க முடிகிறதா
இல்லையாவென்று..
நான்
குருடனாயிருந்தாலும் கூட..
கடமையே கண் என
பகவத்கீதையுரைக்கிறது..
அய்யோ
கடவுளென்று எதுவுமில்லையென்று
இக்கூற்றை பொய்யாக்க
எதுவுமே செய்யாமல்
வெறும்சதையாய் வாழப்போகிறீர்களா..
பகுத்தறிவுப் பேதைகளே
வாதிப்பதை நிறுத்திவிட்டு..
உங்கள் கொள்கைகளை
காலத்திற்கேற்ப
களையெடுங்கள்..
தவறெனில்
பெரியாரின் நியமமாயினும்
தயங்காமல் களைந்தெரியுங்கள்..
உங்களுக்காகயில்லாவிடிலும்
எதிர்வரும் சீரான சமுதாயத்திற்காயினும்..
புரிதலில் இவ்வுலகம் மலரட்டும்..

தமிழ் கனா

Labels:

என் தமிழ்

பிறர் வழி உதித்தாழும்

என் வழி பிறந்தாழும்

மணப்பதென்னவோ அதன்

என்றும் மாறா அற்புத நறுமணமே..

தமிழா நீ தமிழா?

Labels: , ,

நாட்களை சேமிக்கத்

தவறியோர்

நாட்காட்டிகளை

செமிப்பதாய் எங்கோ

படித்திருக்கிறேன்..

நானும் சேமித்தேன்

தமிழ் உள்ளம் ஒன்றை

என்னுள்..

முதியவனின் புதுத்துணைவியாய்..

என்னுள் சமைந்தவள்

முதலில் முனகினாள்..

பின் புலுங்கினாள்..

புலம்பினாள்..

கதறினாள்..

என் காதுகளினுள்ளே

கடப்பாறை கொண்டு உழுதாள்..

அழுதாள்..

என் மூளை நரம்புகளில்

தாண்டவம் அரங்கேற்றினாள்..

உடைந்தது என்னுள்ளம்..

இருந்தும் இன்னமும்

என் மழழைச் சிற்பியின்

நா உளியை

ஆங்கில கொச்சையிலேயே

வார்த்துக்கொண்டிருக்கிறேன்.

தமிழ்

Labels: ,

தமிழ் தாயின் கருவில்

என்னை தரித்ததாலோ என்னவோ..

தரித்தேன் தமிழை நாளும்

என் நாவில் கருவாய்..

என் தமிழ் நாவில் ஆங்கில எச்சங்களை

உமிழும்போதெல்லாம்

உணர்கிறேன் என் தமிழின் அனல் மூச்சு..

என் நாட்டில் கேட்பாரற்று கிடப்பதாம்

கேற்பதற்கு அறியவாம்

பொற்குடமாம் எம்தமிழ்.

வேண்டுகோள்

Labels:

எம்மை பாராட்டுங்கள்

எந்த மொழியினாலும்

எம்புகழ் பறைசாற்றுங்கள்

எந்த மொழியினாலும் - ஆனால்

எம்பிழை மட்டும்

உமிழ்ந்தருளுங்கள்
எம்தாய் மொழியாம் சுந்தர தமிழினில்..

நான்

Labels:

இழந்த வாழ்க்கை என்னை இன்னான் என்றது

போற்றும் வாழ்க்கையோ பொய்யன் என்றது

கேட்ட வாழ்க்கையோ பிணமே என்றது

பெற்ற வாழ்க்கையோ

இனி என்ன சொல்ல

என்கிறது..

பதிந்ததா உணர்ந்ததா.. அறியேன்.

Labels:

கண்ணே..

கனியமுத பெண்ணே..

நீ கண்ணிமைத்த ஒரு நொடி..

வைத்தாய் என் நெஞ்சிலுன் முதலடி..

பிறகெல்லாம் நடந்தேன் உன் சொற்படி..

என் மனதில் நீ

இருந்துமில்லாமலிருக்கும்

மாயை நடத்துவதேன் என்னை இப்படி..

நானாகவே நான் உன்னை காண..

நீயாகவே நீ என்னை அருள..

உணர்வாலயே நான்

உயிர்த்தெழுந்தேன் மறுபிறவியாய்..

தாய்

Labels: ,

என்

உயிர்த்தாய் கருவில் தோன்றி

மொழித்தாய் முதுகில் ஏறி

கல்வித்தாய் பாதம் பணிந்து

செல்வத்தாய் சுகத்தில் ஒளிர்ந்து

கன்னித்தாய் எஞ்செல்வம் ஈன

மங்கலத்தாய் எந்துணைப் பேண

கடல்த்தாய் கரங்களில் சாய்ந்து

பூமித்தாய் மடியில் ஓய்ந்தேன்..

என்னிமை மூடாத ஒரு தருணத்தில்

Labels: , ,

உலகம்வாழ் மக்களுக்கு ஓர் நற்செய்தி

காலன் கருவூலம் கனிந்து விட்டதால்

ஈழ தானத்தை வரவேற்று

மனமகிழ்ந்து - காலன் தாம்

பூலோக வாசம் மலர

புகுகின்றான் புதுவீடு

நம் உலகுக்கு..

நகர்தமையெல்லாம் நரகமயமாக்க

என்றோ விரைந்தான் சித்திரகுப்தன்..

சொர்க்கலோகத்தில் இட நெருக்கடி..

ஈழத்தமிழர் விடுத்து

இந்திரன் முதலானோர்

நரக பயணம் மேற்கொள்ள

சர்வேசனின் ஆஞ்யை..

தனியிடம், பெரும்பதவி கோரும்

சிற்றறிவார்வலர்களையெல்லாம்

இன்றே முன்பதிவு செய்ய

அழைக்கின்றான் சித்திரகுப்தன்

விரைந்து வாரீர்..

வெகுநாட்களுக்குப் பிறகு

கடுகடு காலனின் முகத்தில்

பெரும்புன்னகை

பூரிப்பு

மகிழ்ச்சியின் ஆரவாரம்..

கடல் கொண்டு முழுக்கவா..

எரிமலையில் பொறிக்கவா..

நோய்களெங்கும் பரப்பவா..

நிலம் பிளந்து கொய்யவா..

பசுமை ஒழிய செய்யவா..

என்றே இரவுதோறும்

சிந்தித்துக்களைத்திருந்த

காலனின் நெஞ்சில்

மகிழ்ச்சிப் பிரவாகம்

காலனின் வார்த்தையில்

இனி.....

இந்த பகுத்தறிவு மனிதர்களின்

உள்ளக் கிடக்கையை

புரிந்து கொள்ளவே இயலவில்லையே

தனக்கு உபயோகமில்லாவிடிலும்

தனக்கு உரிமையில்லா

பிற உயிர் அழித்து

மகிழ்ச்சி கொள்கின்றான்...

தன் பிறப்பையே

அறிய முடியாத இப்பாலகன்

பிறர் இறப்பை மகிழ்ந்து

பறைசாற்றி பாடுகின்றான்....

யுத்தமாம்...போராட்டமாம்....

இவர்களின் அழிக்கும் வெறியில்

எனது எருமையே

களைத்து இளைத்துவிட்டது....

உணவு பஞ்சத்தை

பற்றியே நான் இதுவரை கேட்டதுண்டு

இப்பொழுது தான் உணர்வு பஞ்சத்தை

இவர்களின் வாயிலாக அறிகின்றேன்

சுயம் உணர்வற்ற கோழைகள்....

தோண்டும் இடமெல்லாம்

சடலங்களைப் பார்த்த

பிறகாவது நிற்க்குமா

உயிரழிக்கும் இச்சீரோகம்...

இவனுக்கு மட்டும்

வீடு வேண்டுமாம்

நாடு வேண்டுமாம்

உலகம் வேண்டுமாம்

சுகம் வேண்டுமாம்

சுகாதாரம் வேண்டுமாம்

பிறரையழித்து

சுகம் காணுமிவனால்

உயிரற்ற உலகில்

ஒரு நாள்

உய்த்திருக்க முடியுமா?

பிற உயிர் அருமை

அன்று புரியும்..

யாரைச் சொல்லி ஏது பயன்

இருப்பவன்

இல்லாதவன்

பிளவை

இருப்பவனும் உரைக்க மாட்டான்

இல்லாதவனும் உரிக்க மாட்டான்

வரலாறுகளின் வாய்ப்பாட்டில்

மிதந்துகொண்டிருக்குமிவன்

தன் எச்சத்திடம்

பிச்சை கேட்டு

நிற்கையில்

உணர்வான் மிச்சத்தை

இனியும் கனவுகளிலேயே

கற்பனைத்தேரோட்டி

காவிய வில்ப்பூட்டி

மாயமானுக்காக

விழி வைத்துக் காத்திராமல்

என்னால் இனியும் முடியும்

என்றுரமுடையோரும்

புதுப்பிறவியெய்தோரும்

அச்சமென்பதை

மிச்சமின்றி மழித்தோரும்

உறவு கொண்டாட

உயிர் வளர்க்காமல்

தமிழ் மறவு கொண்டாடி

தமிழருணர்வு கொண்டோரும்

விரைந்து

புத்துலக அகழ்த்தோண்டி

அடிக்கல் நாட்டி

உணர்ந்து

எச்சமிச்சங்களுக்கு

கைகாட்டி நாட்காட்டியாக

அகம் காட்டி

வழிகாட்டி

உரங்கூட்டி

மெருகேற்றி

நல்லதோர் எதிர்காலத்திற்கு

வழிநடத்தி வரவேற்குமாறு

வந்தாரை வாழவைக்கும்

தமிழ் நெஞ்சின்

வெறுமை கண்டு

உள்ளம் புலுங்கி

உயிர் குன்றி

வசை பாடி

கண்கள் கலங்க

சொல்லில் பொறி தெரிக்க

தறி கெட்டு

மொழிந்தவிழ்ந்தது

இடிமுழக்க குரலில்

காலக்கிரக வேந்தன் கூற்று.

என் குரலில் ஒரு குறள்

Labels: ,

வறியோர் சுவையறிய, வானோர் உகுவர் - சிறியோர்
அவ்வறியோர் சுவையறியாரெனவே நகுவர்.

தெய்வத்திரு வள்ளுவனின் குறை - கொடுக்க மறந்த
அவன் குறளின் உரை.

பேராசை

Labels: ,

நிறைந்த கண்களில், கரையும் வார்த்தைகள்..

உரித்த மார்பை நெரிக்கும் சொற்றொடர்கள்..

கருத்த மனதை வெளுக்கும் எண்ணங்கள்..

என் கவிதைக்கு பேராசை!

திருவழி

Labels: , , , , ,

உணர்வுகளின் மெய் வழி

உய்விப்போர் பெருவழி

உரியோர் பெறாவழி

உணர்ந்தோர் தொழும் வழி

உண்மையறியும் நெறிவழி

ஊன்கண்ணீந்தோர் உணரும் வழி

உலகின் நல்வழி

உறவழிந்தோர் போற்றும் வழி

உணர்வறியான் தொழூஉம்

உணர்வான்..

உணர்விலான்..

உய்வில்லாழ்வான்

செங்கழல் அடையும் திருவழி.

என் ஈசனே

Labels: , , , , ,

உருவிலா கருவின்

உயிர்வழி ஈந்த பெருமானே..

கருவிலா எம்மை

கருத்தறித்தாளும் உரியோனே..

உணரா..

உணர்வுவாழ் எம்மை..

உய்விக்கும் பெரும்தகையோனே..

தன்நிகரில்லா திருவொளியானே..

உன் செங்கழலோங்கி

என்

சிற்றறிவு சிந்தை நீக்கி

உன்நெறி ஒளிர

உருதெளிவித்தருள்வீரே..

பிறந்ததும் பிரிந்ததேன்..

Labels: , , , , ,

உலகுக்கு உனைக் காட்ட..
உலகை உனக்குக் காட்ட..
கொணர்ந்தேன் உனை
என்னுடன்..
என்னில் நீயாய்..
பிறந்ததும் காணவில்லை..
தேடினேன் எங்கும்..
கண்டோர் வதனமெங்கும்
உன்னை நான் தேட..
என்னிலவர்கள்
உன்னை
த் தேட..

காணாமல் கதறினேன்..
காரணமறியா அப்புதியவர்களோ
காட்டினார்கள்
எதை எதையோ

என் உள்ளம் கனிய..
அப்பாமரர் செய்கையால்
கரைந்த
களைப்பையாற்ற
களிக்க..
நான் வேண்டுவது
அதுவென்றே
நினைந்து
நிறைந்தார்கள்
அவ்வருள்வறியோர்கள்..
கதறி களைத்திருந்தவன்
காணாமல் என்னைத்
தேடி வருவாயெனவே
பல நாள்
காத்திருந்தேன்..
வராமல் போகவே..
காலத்தின் கடனால்
உன்னைத் தேடுவதை
தொலைத்துவிட்டு..
புதியவனாய்
பிறந்த நான்
புரியாதவனாகிப்
போனேன்.
புரிந்தவனே
என்னைப் புரந்தவனே
புரியாததாய் நகைக்காதே
உன் நகைப்பில்
மீண்டும்
என்னைத் தொலைத்து
உன்னைத் தேட
நான் தயாரில்லை.

உன் அடியைப் போற்றி..

Labels: , , , , ,

உலகின் பேரார்வம்
தாய்மையின் மடி
நெஞ்சகத்தின் முடி
தண்ணீரின் பிடி
குடிகளின் படி
தமிழ்த்தாய் கொடி
பிறப்பறுக்கும் கடி
சான்றோர் பெருங்குடி
உண்மை சூத்திரநாடி
உணர்வறியா சுகநெடி
சொல் வேந்தர் சுவடி
கற்பனைகளின் வடி(வு)
தற்பெருமையின் வெடி
கனவுகளின் சேடி
அறியாதவற்றின் கோடி
அருந்தவர் மகுடி
பற்றற்றார் பற்றும்
தெய்வத் திருவடிக்கு... சரணம்.