என்னிமை மூடாத ஒரு தருணத்தில்

Labels: , ,

உலகம்வாழ் மக்களுக்கு ஓர் நற்செய்தி

காலன் கருவூலம் கனிந்து விட்டதால்

ஈழ தானத்தை வரவேற்று

மனமகிழ்ந்து - காலன் தாம்

பூலோக வாசம் மலர

புகுகின்றான் புதுவீடு

நம் உலகுக்கு..

நகர்தமையெல்லாம் நரகமயமாக்க

என்றோ விரைந்தான் சித்திரகுப்தன்..

சொர்க்கலோகத்தில் இட நெருக்கடி..

ஈழத்தமிழர் விடுத்து

இந்திரன் முதலானோர்

நரக பயணம் மேற்கொள்ள

சர்வேசனின் ஆஞ்யை..

தனியிடம், பெரும்பதவி கோரும்

சிற்றறிவார்வலர்களையெல்லாம்

இன்றே முன்பதிவு செய்ய

அழைக்கின்றான் சித்திரகுப்தன்

விரைந்து வாரீர்..

வெகுநாட்களுக்குப் பிறகு

கடுகடு காலனின் முகத்தில்

பெரும்புன்னகை

பூரிப்பு

மகிழ்ச்சியின் ஆரவாரம்..

கடல் கொண்டு முழுக்கவா..

எரிமலையில் பொறிக்கவா..

நோய்களெங்கும் பரப்பவா..

நிலம் பிளந்து கொய்யவா..

பசுமை ஒழிய செய்யவா..

என்றே இரவுதோறும்

சிந்தித்துக்களைத்திருந்த

காலனின் நெஞ்சில்

மகிழ்ச்சிப் பிரவாகம்

காலனின் வார்த்தையில்

இனி.....

இந்த பகுத்தறிவு மனிதர்களின்

உள்ளக் கிடக்கையை

புரிந்து கொள்ளவே இயலவில்லையே

தனக்கு உபயோகமில்லாவிடிலும்

தனக்கு உரிமையில்லா

பிற உயிர் அழித்து

மகிழ்ச்சி கொள்கின்றான்...

தன் பிறப்பையே

அறிய முடியாத இப்பாலகன்

பிறர் இறப்பை மகிழ்ந்து

பறைசாற்றி பாடுகின்றான்....

யுத்தமாம்...போராட்டமாம்....

இவர்களின் அழிக்கும் வெறியில்

எனது எருமையே

களைத்து இளைத்துவிட்டது....

உணவு பஞ்சத்தை

பற்றியே நான் இதுவரை கேட்டதுண்டு

இப்பொழுது தான் உணர்வு பஞ்சத்தை

இவர்களின் வாயிலாக அறிகின்றேன்

சுயம் உணர்வற்ற கோழைகள்....

தோண்டும் இடமெல்லாம்

சடலங்களைப் பார்த்த

பிறகாவது நிற்க்குமா

உயிரழிக்கும் இச்சீரோகம்...

இவனுக்கு மட்டும்

வீடு வேண்டுமாம்

நாடு வேண்டுமாம்

உலகம் வேண்டுமாம்

சுகம் வேண்டுமாம்

சுகாதாரம் வேண்டுமாம்

பிறரையழித்து

சுகம் காணுமிவனால்

உயிரற்ற உலகில்

ஒரு நாள்

உய்த்திருக்க முடியுமா?

பிற உயிர் அருமை

அன்று புரியும்..

யாரைச் சொல்லி ஏது பயன்

இருப்பவன்

இல்லாதவன்

பிளவை

இருப்பவனும் உரைக்க மாட்டான்

இல்லாதவனும் உரிக்க மாட்டான்

வரலாறுகளின் வாய்ப்பாட்டில்

மிதந்துகொண்டிருக்குமிவன்

தன் எச்சத்திடம்

பிச்சை கேட்டு

நிற்கையில்

உணர்வான் மிச்சத்தை

இனியும் கனவுகளிலேயே

கற்பனைத்தேரோட்டி

காவிய வில்ப்பூட்டி

மாயமானுக்காக

விழி வைத்துக் காத்திராமல்

என்னால் இனியும் முடியும்

என்றுரமுடையோரும்

புதுப்பிறவியெய்தோரும்

அச்சமென்பதை

மிச்சமின்றி மழித்தோரும்

உறவு கொண்டாட

உயிர் வளர்க்காமல்

தமிழ் மறவு கொண்டாடி

தமிழருணர்வு கொண்டோரும்

விரைந்து

புத்துலக அகழ்த்தோண்டி

அடிக்கல் நாட்டி

உணர்ந்து

எச்சமிச்சங்களுக்கு

கைகாட்டி நாட்காட்டியாக

அகம் காட்டி

வழிகாட்டி

உரங்கூட்டி

மெருகேற்றி

நல்லதோர் எதிர்காலத்திற்கு

வழிநடத்தி வரவேற்குமாறு

வந்தாரை வாழவைக்கும்

தமிழ் நெஞ்சின்

வெறுமை கண்டு

உள்ளம் புலுங்கி

உயிர் குன்றி

வசை பாடி

கண்கள் கலங்க

சொல்லில் பொறி தெரிக்க

தறி கெட்டு

மொழிந்தவிழ்ந்தது

இடிமுழக்க குரலில்

காலக்கிரக வேந்தன் கூற்று.

0 comments:

கருத்துரையிடுக