கற்பனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கற்பனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒரு நடுநிசிப் பயணம்

Labels: , ,

கனவுக்கும் நினைவுக்கும்

இடையே ஒரு நடுநிசிப் பயணம்

உயிர் மட்டுமே உனதாய்

எங்கும் அமைதி..

உணர்வு குறைந்த

ஒரு வெட்டவெளி..

மிதக்கும் அறிவு..

கரையில்லா

கவிதையாய் காவேரி..

அதில்

ஓடிப் பார்க்கவொரு

ஓடம்.

இரவை உண்ணும்

தாகத்தோடு

உன்னை மட்டுமே

அறியும் கால ஏடு.

தட்டிப்பார்க்க

ஒரு கதவு

திறக்க நீயிருந்தாய்

உள்ளேயும்

வெளியேயும்..

திறந்தாலும் நீயில்லை

மீண்டும்

பிறந்தாலும் நீயில்லை

சுற்றிலும் போர்க்கோலம்

திலகமிட்டது நீ

கண்ணீருக்கு உள்ளே

சுடும் நெருப்பு

தீயாய் கனலாய்..

சவரம் செய்யாத

கண்களுடன்

கனவாய் நீ

மறைய

நினைவாய் நான்

எழுந்தேன்.

விளக்கொளியில் வீதியாய் நிற்கிறேன்..

Labels: , , ,

பகுத்தறிவின்

பாதியாய்

பெயர்கிறேன்..

உள்கனிந்தோர்

சாதியாய்

பணிகிறேன்..

நல்லோர்க்கு

நாதியாய்

உணர்கிறேன்..

நிலவொளியின்

நீதியாய்

களிக்கிறேன்..

இன்னும்..

விளக்கொளியில்

வீதியாய்

நிற்கிறேன்..