என் தமிழ்
பிறர் வழி உதித்தாழும்
என் வழி பிறந்தாழும்
மணப்பதென்னவோ அதன்
என்றும் மாறா அற்புத நறுமணமே..
கண்ணீரின் கவிதை.. கரிப்பதோ!! சுவடுகளின் பாதையில்.. ஓர் சித்திரம்.
நாட்களை சேமிக்கத்
தவறியோர்
நாட்காட்டிகளை
செமிப்பதாய் எங்கோ
படித்திருக்கிறேன்..
நானும் சேமித்தேன்
தமிழ் உள்ளம் ஒன்றை
என்னுள்..
முதியவனின் புதுத்துணைவியாய்..
என்னுள் சமைந்தவள்
முதலில் முனகினாள்..
பின் புலுங்கினாள்..
புலம்பினாள்..
கதறினாள்..
என் காதுகளினுள்ளே
கடப்பாறை கொண்டு உழுதாள்..
அழுதாள்..
என் மூளை நரம்புகளில்
தாண்டவம் அரங்கேற்றினாள்..
உடைந்தது என்னுள்ளம்..
இருந்தும் இன்னமும்
என் மழழைச் சிற்பியின்
நா உளியை
ஆங்கில கொச்சையிலேயே
வார்த்துக்கொண்டிருக்கிறேன்.
என்னுள்ளுக்கும் உள்ளிருக்கும் உள்ளே..
பல்லே.. பால் பொருளே..
உள்ளுணர்வுக்கும் எட்டாது
உயர வீற்றிருக்கும்
திருமுள்ளே..
என் உயிரின் கருப்புல்லே.. பூண்டே..
கற்பனைகளை கடந்துய்விக்கும் சொல்லே..
உணர்ந்தறியா..
உணர்வொன்றன்றியறியா
இவ்வறிய பாலகனை
கறையண்டாது காத்தருளும்
உயிர்வலிக்கொப்பான
உன் தெய்வதிருவடிக்கு
என்
சிரசமர்ப்பணம்.